BBC Learning English

Word Per Day

BBC World Service

Sunday, March 13, 2011

**யுத்தம் செய்** - Yuddham sei

யுத்தம் செய்

திரு. பாக்யராஜ் அவர்களுக்குப் பிறகு திரைக்கதை யுக்தியை பயன்படுத்தி வெற்றி பெறுபவர் திரு. மிஷ்கின் மட்டுமே.  இவரது முந்த்தைய படங்களில் “ நந்தலாலா” தவிர படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் திரைக்கதை, முக்கியமா படம் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத ட்விஸ்ட்/ கிளைமாக்ஸ்/ ஃப்ளாஷ்பேக்..

இவரை சிறந்த இயக்குனர்னு என்னால ஒத்துக்க முடியல..இவர் தேர்வு செய்யும் நடிகர்களில் சிலர் சிறப்பாக செய்கிறார்கள்..சிலர் சில காட்சிகளில் சொதப்பி விடுகிறார்கள்.. இவரும் ப்ரிவூவ் பார்த்தாலும் திரைக்கதை போதும் மக்கள் ஏற்றுக்க்கோள்வார்கள் என்று விட்டுவிடுவார் போல..

(சித்திரம் பேசுதடி கிளைமாக்ஸ்.. படத்தோட எல்லா குறைகளையும் மறச்சிடுச்சி..)

தனது முந்த்தைய படங்களை விட ”யுத்தம் செய்” படத்தில் அதிக கவனுத்துடன் காட்சிகளை வைத்துள்ளார்.

சேரன் ரொம்ப அழகா, இயல்பா, நிறைவா செஞ்சிருக்கார்.

இடைவேளை வரை கதை புரியவில்லை.. த்ரில்லர் படம் என்பதால்.. இடைவேளைக்குப் பிறகு ஆச்சர்யம் அதிகம்..

இந்த படத்தைப்பொருத்தவரை பின்பகுதி கதை முன்பகுதியை அர்த்தமுள்ளதா ஆக்கிடுச்சி.. மிஷ்கின்னை எவ்வளவு வேணாலும் பாராட்டலாம்..

இந்த படத்தில் ரொம்ப மிரள வச்சது லக்‌ஷ்மி ராமக்ரிஷ்ணனோட நடிப்பு, அம்மாவா பாசமும் கோபமும் கலந்து அதிரடி பண்ணிட்டாங்க.. நான் இப்ப இவங்க விசிறி .

ஜயப்பிரகாஷ், Y.G மகேந்திரன் இவங்களும் சூப்பரா பண்ணியிருக்காங்க..

படத்தோட எல்லா விளம்பரங்களிலும் சேரன் படம் இருப்பதால் படத்தோட பின்பகுதி இன்னும் விறுவிறுபாகிடுது..

படத்தோட பின்னணி இசை மிரட்டல்.. எல்லா தீம்ஸ்சும் சூப்பர்..

பெரு நகரங்களில் ஆள் கடத்தல் குறிப்பாக பெண் கடத்தல் பெண்களுக்கெதிரான குற்றங்கள்னு இவர் தனது இரண்டு படங்களில் தனது கோபத்தையும் சமூக விழிப்புணர்வையும் ஆழமா பதிவு பண்ணியிருக்கார்.

”ஈசன்” படத்தோட கதை ஒத்துப்போனாலும்.. இது சமூக பொது நோக்குடன் நம்மளை யோசிக்க வைக்கிற படம்.. முக்கியமா பெரு நகர குடும்பங்கள் பார்க்க வேண்டியது ரொம்ப அவசியம்.

இன்னும் இலை மறை காயா எவ்வளோ சமூக அவலங்கள்  இருக்குங்கிற எச்சரிக்கையை இந்தப்படம் தமிழ்ச்சமூகத்துக்கு தந்திருக்கு..அஞ்சாதே யுத்தம் செய்

HATs OFF to Mysskin..

*****

எனக்கு ”ஒருகை ஓசை” ங்கிற பாக்கியராஜ் பட திரைக்கதைதான் ஞாபகம் வந்த்தது..
Screenplay ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியங்கிறது இந்தமாதிரி படங்களைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கலாம்..

Saturday, February 26, 2011

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

***இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.**

தமிழர் வாழ்வில் கீரை பிரிக்க முடியாத ஒன்று
கீரையில் பல வகைகள் உண்டு
இன்றைய நவீன உலகில் நம் வீடுகளில் எத்தனை கீரை பயன்படுத்துகிறோம் .. எத்தனை பேருக்கு கீரை வகைகள் தெரியும்
என்பது.. கேள்விக்குறிதான்?????
பாலக்கீரை
சிறு கீரை
முளைக் கீரை
தண்டுக் கீரை (அ) தண்டங்கீரை
பசலை (ம்) பசலிக் கீரை
பருப்புக்கீரை
அகத்திக்கீரை
மருதங்கீரை
முருங்கை (மர முருங்கை/ செடிமுருங்கை)
பொன்னாங்கண்ணி (பச்சை / சிவப்பு)

இன்னும் கிராமங்களில் இவை புழக்கதில்தான் உள்ளன..
சென்னை போன்ற பெரு நகரங்களிலும் முக்கிய சந்தைப் பகுதிகளில் சில கீரை வகைகள் கிடைக்கின்றன.. விரும்பி வாங்கினால் வியாபரியும் விவசாயியும் பயனடைவர்... விரும்பி உண்டால்
மருத்துவச்செலவு குறையும்.. இளையதலைமுறையும் இயற்கையின் மகத்துவம் அறியும்.. குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்தது..

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்...

Friday, January 28, 2011

Udal Mannukku - Uyir Thamizhukku - உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

ரஹ்மான் அவர்களால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமை. இந்த இசையும் கவிதையும் தமிழன் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய தினமும் நினைக்க வேண்டிய கடவுளை விட முக்கியமான தமிழின துதி. இன உணர்வு இல்லாதவர்களுக்கும் இன உணர்வு தரும் மருந்து. மணிரத்னம், ரஹ்மான், வைரமுத்து மற்றும் படக்குழுவினர் அனைவரும் நன்றிக்குரிவர்கள்.

Sunday, January 2, 2011

கமல் கவிதை


கமல் கவிதை - பள்ளு இலக்கிய வகையில் மூத்த பள்ளி இளைய பள்ளி இருவரும் சண்டை போடுவது (சிவன் விஷ்ணு இருவரையும் நையாண்டி செய்வதாக அமைந்திருக்கும் )
கமலின் இந்தக்கவிதையில்  மகாலக்ஷ்மியை ஒரு பெண் கேள்வி கேட்டு வேண்டு வதாக உள்ளது இதில் வருத்தப்படவோ - மதத்தைப்பழிப்பதாகவோ கருத எதுவும் இல்லை.  இது திரைப்படத்தில் இடம் பெறாதது எனக்கு வருத்தமே.  ஹிந்து சமூகம் இன்னும் எவ்வளவோ மாறவேண்டி உள்ளது.  இலக்கிய புரான காலங்களின் இருந்த சுதந்திரம் கூட இப்போது இல்லை என்பது வருத்தம்தான்.  நானும் ஒரு ஹிந்து தான் தமிழன்தான் அதற்காக எழுத்தாழனின் படைப்பாளியின்  சுதந்திரத்தை தடுப்பது முறையல்ல.

Manmathan Ambu - மன்மதன் அம்பு

கமல் கவிதை - இந்தக் கவிதையை எதிர்பார்த்தும  மன்மதன் அம்பு அப்படிங்கிற தலைப்பாலும் மறுபடியும் கமல் காதல் படம் என்பதால் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ட்ரைலர் பார்த்தப்பவே மன் - மதன் - அம்பு  என்கிற மூன்று பாத்திரப்பெயர்கள் என்பதை அறிந்து விட்டதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைந்தது.  கமல் கவிதை படத்தில் இல்லை என்று பார்த்தவர்கள் சொன்னதால் இன்னும் எதிர்பார்ப்பு குறைந்தது.   பஞ்ச தந்திரம் - தெனாலி - பம்மல் கே சம்பந்தம் வரிசையில் பார்க்கலாம் என்று படம் பார்க்கப்போஎனேன் .  கமல் ரசிகனாக கமல் பேட்டிஎல்லாம்  பார்த்தவர்களுக்கு இந்தப்படம் அவர் அனுபவங்களின் தொகுப்பு என்பது தெரியும்.
நடிகன் - நடிகை - உறவை சராசரி கண்கள் பார்க்கும் விதம்
தனிமையில் வாழ்ந்து பழகும் ஒருவனின் தவிப்பு
புற்று நோயால் பதிக்கப்பட்ட்ட நண்பரின் நட்பு - நோயால் அவர் படும் பாடு
அவர் மனைவியின் தவிப்பு
(அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு சமயத்தில் - புற்று நோய் பாதிக்காப்பட்டு இறந்த நண்பர் 
நம்மவர் பட இசையமைப்பாளர் மகேஷ் - ஆளவந்தான் பின்னணி இசை இவர்தான் (புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர் , நடிகை கௌதமி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமானவர் ) இப்படி வாழ்க்கையில் இவருக்கு பாதிப்பை தந்த நட்பு அதிகம் .

 இவர் ஒரு பெரிய (எண்ணிக்கையில் அதிக உறவுகள் கொண்ட) குடும்பத்தில் பிறந்து வழர்ந்தவர் - உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்தவர் என்பதும் - ஒன்றுக்கு மற்பட்ட பெண்களின் உறவால் வாழ்வையும் பென்ன்களையும் நன்கு உணர்ந்தவர் என்பதும் படம் முழுக்க தெரிகிறது.

தனது காதல் வாழ்வை திரைக்கதையாக சொல்லுவதும் அதை அப்படியே Reverse mode ல் பாடலாக எடுத்திருப்பதும் ரசிக்கும்படியாக உள்ளது.  எப்படி ஜீன்ஸ் படம் உலக அதிசயதுக்காக ஜனங்க பார்கப்போனார்களோ அதே மாதிரி பெரிய கப்பல் , கமல் த்ரிஷா, காமெடி வித்யாசமான locations காக படம் பார்க்கலாம்.   மன்மதன் அம்புன்னு பேர் வச்சு ரசிகர்களை ஏமாத்திருக்க வேண்டாம்.  கமலுக்கு வயசாயிடுச்சு

இயற்கைமுறையில் வாழுவோம்



இயற்கையை பேணுவோம் இயற்கைமுறையில் வாழுவோம்
இயற்கையை புரிந்து மனித இனம் காப்போம்

மந்திரப்புன்னகை

மந்திரப்புன்னகை - பிரிவோம் சந்திப்போம் படத்துக்குப்பிறகு இயக்குனர் கரு பழனியப்பன் அவர்களின் அடுத்த படைப்பு.  முந்தைய படத்தில் கையாண்ட மனோதத்துவம் இந்த படத்துலயும் உண்டு.  உளவியல் ரீதியா பாதிக்கப்படுகிற ஒரு இளைஞன் தன்னோட பார்வையில் தனது கருத்துக்களை அப்படி அப்படியே பேசும் வசனங்கள் அத்தனையும் கைதட்டல் வாங்குபவை.  இருந்தாலும் எல்லா கேட்ட பழக்கங்களும் உள்ள மனதளவில் பாதிக்கப்பட்ட ஒருவனை எல்லாம் தெரிந்த பின்பும் ஒரு பெண் மணந்துகொள்ள சம்மதிப்பது கொஞ்சம் ஓவர்தான்.  அடுத்தபடமும் மனோதத்துவத்துவ பிரச்சனையாக  எடுக்காமல் இருந்தால் நலம்..  

இன்றைய உலகில் இப்படியால்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியதர்க்காக இவரைப்பாரட்டியாக வேண்டும் .  காமெடி chaanalkalukkullaeye  தொலைந்து போகும் தமிழ் குடும்பங்கள் இது போன்ற படங்களை ஏற்றுக்கொள்ளும் நாள்தான் புதிய படைப்புகளை தமிழகம் உலகத்துக்கு தரும் நாளாக இருக்கும்..

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்   - மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் அருமையான அரசியல் நையாண்டி கலந்த நகைச்சுவை உணர்வு மற்றும் பிரம்மாண்டமுடைய தமிழ் திரைப்படம்.  புலிகேசி மாதிரியே சமூக அக்கறையோட எடுத்துருக்கார்.  

 இவர் படங்களில் பாடல்கள் என்னவோ சரிப்படலை .  அடுத்த படத்தில் இவர் பாடல்களில் கவனம் செலுத்தலாம் அல்லது பாடல்களை தவிர்ப்பது நலம்.  ஜெய்சங்கர் அசோகன் மேஜர் சுந்தரராஜன் மற்றும் முந்தய தலைமுறை நடிகர்கள் இயக்குனர்களை இவர் நினைவு கூர்த்திருப்பதும் 2D, 3D, VFX தொழில் நுட்பங்களை இவர் தன் படங்களுக்கு பயன்படுத்துவதும் அற்புதம்.. வெறும் காமிக்ஸ் புத்தகங்கள் குழந்தைகளுக்கு மட்டும்தான்னு இல்லாமல் அதில் சமூகம், அரசியல் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்தையும் கொடுத்து நையாண்டி கலந்த நகைச்சுவையையும் சலிக்காமல் ரசிகர்களுக்கு தந்ததுக்கு நன்றி..  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

மறுபடியும்

ப்ளாக் எழுதி ரொம்ப நாளாயிட்டுது .  இன்னிக்கு திடீருன்னு தோநிட்டுது    சினிமா, T.V,  புத்தகம்னு மறுபடியும் கொஞ்சம் லைப் போரடிச்சதால மறுபடியும் ஆரம்பிச்சுட்டேன்.  ப்ளோக்ல எழுத்துப்பிழை தவிர்க்கமுடியாதது.  மொழி ஆர்வலர்கள் தொழில்நுட்பத்தவருகளை பொறுத்தருள்க...  இதைபடிச்சுட்டு தமிழ் தெரியாதவங்கல்லாம் எழுதுறாங்கன்னு இளையதலைமுறையை  குறை கூறாதீர்கள்.  இதை  எஸ் எம் எஸ் ஆங்கிலம் மாதிரி சுருங்கிய மருவிய வடிவமா எடுத்துக்கொள்ளுங்கள் ...நன்றி

Monday, January 25, 2010

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan - 2010 - தமிழில் புதிய முயற்சி

இந்த படத்தை பார்த்துவிட்டு வாயார புகழவும் முடியலை, கோபத்துல திட்டவும் முடியல. இருந்தாலும் தமிழில் இந்தமாதிரி புதிய முயற்சிகள் வரவேற்புக்குரியது. சிறந்த கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்க நிறைய செலவாகும் என்பதால் அதை ஆங்கிலப்படங்கள் ல இருப்பதுமாதிரி எதிர்பார்ப்பது தவறு. வரலாற்றுப் பின்புலத்தை பயன்படுத்தி ஒரு கற்பனைக்கதையை எடுக்கும் போது அது யாரையும் பாதிக்காதவாறு இருக்கணும் அதே சமயம் படம் பார்க்கிறவர்களை குழப்பாம இருக்கணும் . ஏன்னா நிஜம்நு நம்பறமாதிரி காட்டுரப்ப . நிஜ வரலாறும் இதுதானான்னு வரலாறை தப்பா நினைச்சுடுவோம்.

இந்த படத்துல நிறைய லாஜிக் தப்பு இருந்தாலும் . முழுக்க முழுக்க உலக சந்தையை மனசுல வச்சு படத்தை எடுத்துருக்காங்க ஆனா செல்வராகவனோட முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான திரைக்கதை வசனம் இந்த படத்தில் மிஸ்ஸிங்.
ஏழு தடைகளை உருவாக்குற சோழ மக்கள் தாய் தேசத்தோட தொடர்புக்காக எதையும் யோசிக்க மாட்டாங்களா ?
படம் தொடங்கி முடியுற வரைக்கும் காமம் தூக்கலா இருக்கு. கார்த்தி லோக்கல ஆரம்பிக்குராறு, ரீமாவும் ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தில் தொடர, அப்புறமா கொஞ்சம் செந்தமிழ் சம்ஸ்கிருத தமிழ், ராணுவ வீரர்களின் கொடுமை வரை போய் முடியுது .
பெரிய ஓட்டை என்னான்னா ரீமா சென் பாண்டிய மன்னன் வம்சாவளின்னுட்டு அவரும் அவர் குடும்பமும் ராஜா வேஷம் போட்டுட்டு சண்டை போடுறதுதான்.

அம்மனுஷ்யம் பல இடங்களில் வருகிறது இருந்தாலும் ரீமா சென் எப்படி அதை தனக்கு சாதாகமா பயன் படுத்த முடியுது.

செல்வாவிடம் நிறைய திறமை இருக்கு. முந்தைய படங்களில் இந்தக்கால இளைஞர்களின் இயக்குனர்ன்னு தன்னை நிலைநிறுத்தியவர் . இந்த படத்தில் மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல் ஹாசன் , போன்ற இயக்குனர்களின் தர வரிசையில் இடம் பிடிக்க முயற்சி எடுத்திருக்கிறார் . முதல் முயற்சி பொருளாதார வெற்றியை கொடுத்தாலும். இவர் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.

பாகம் இரண்டு எடுக்கப்போறதா சொல்லியிருக்காரு. இந்த படத்தோட குறைகளை தவிர்த்து எடுக்கட்டும்.

தசாவதாரம், 23 ம; புலிகேசி போன்ற படங்களில் வரலாறு குறிப்பிடப்பட்டாலும் நிஜத்தை பாதிக்காத அளவுல நேர்த்தியா செதுக்கப்பட்டிருக்கும் . அதே சமயம் நகைச்சுவை அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும், இரட்டை அர்த்த வசனங்கள் , காமம் தவிர்க்கப்பட்டிருக்கும். அவைகளும் பிரம்மாண்டமான படங்கள் தான். வசூலில் வெற்றி பெற்ற திரைப்படங்கள்தான் என்பதை அகத்தில் நினையுங்கள் .

அன்பே சிவம்

Video Bar

Loading...

BlogCatalog